/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை
/
உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை
ADDED : ஆக 11, 2025 08:06 AM
ஓசூர்: ஓசூர், சிஸ்யா பள்ளி வளாகத்தில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்) சார்பில், உலக மக்கள் நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், 108 சுமங்கலி பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நேற்று மாலை நடந்தது.
தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில துணைத்தலைவர் சுதா நாகராஜன் தலைமை வகித்தார். ஓசூர் கிளை செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு, விளக்கு மற்றும் பூஜை பொருட்கள் வழங்கப்பட்டன. கணபதி பூஜை, லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் நடந்தது. துணை செயலாளர் கணேஷ், இளைஞரணி செயலாளர் சுவாமிநாதன், மாவட்ட துணைத்தலைவர் குமார், பொருளாளர் கிருஷ்ணசாமி, துணைத்தலைவர் ராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை, மகளிரணி செயலாளர் ரோகினி கணேஷ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.