நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, அப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தங்கமணி, 42. இவர், நேற்று காலை 11:00 மணியளவில், தன் மகன் வீட்டிற்கு செல்ல, திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நாட்டாண்மை கொட்டாயில் இடதுபுறமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், அப்பெண் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் முருகன், சடலத்தை மீட்டு விசாரித்து வருகிறார்.