/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.1.37 லட்சம் மதிப்பு குட்கா கடத்திய கார் டிரைவர் கைது
/
ரூ.1.37 லட்சம் மதிப்பு குட்கா கடத்திய கார் டிரைவர் கைது
ரூ.1.37 லட்சம் மதிப்பு குட்கா கடத்திய கார் டிரைவர் கைது
ரூ.1.37 லட்சம் மதிப்பு குட்கா கடத்திய கார் டிரைவர் கைது
ADDED : ஜூலை 30, 2025 01:40 AM
ஓசூர், ஓசூர், ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே, சிப்காட் ஸ்டேஷன் எஸ்.ஐ., சிரஞ்சீவிகுமார் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த ஹோண்டா வென்யூ காரை நிறுத்தி சோதனை செய்தபோது, கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து, சேலத்திற்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானங்களை கடத்தி செல்வது தெரிந்தது.
இதனால், காரை ஓட்டி சென்ற, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கணபத்சிங், 33, என்பவரை போலீசார் கைது செய்தனர். காரில் இருந்த, 1.37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், 2,340 ரூபாய் மதிப்புள்ள, 38 பாக்கெட் கர்நாடகா மதுபானம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.