/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி
/
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி
ADDED : ஜூலை 10, 2025 01:01 AM
கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கலையரங்கில், பிளஸ் 2 முடித்த உயர்கல்வி (பொறியியல்) பயில இருக்கும் மாணவ, மாணவியருக்கு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைத்து பேசியதாவது:
ஒரு மாணவர் தகுதி யும், வாய்ப்பும் இருக்கும் நிலையில் தவறான கல்லுாரியை தேர்ந்தெடுக்க கூடாது என்பதற்காக, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்நிகழ்ச்சி நடக்கிறது. சரியான கல்லுாரியை தேர்ந்தெடுத்தால், அதுவே, பாதி வெற்றிக்கான அடையாளமாக கருத்தப்படும். சிறந்த கல்லுாரியில் எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்தாலும் அதில், ஆர்வமும் முயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக தொழில்நெறி வழிகாட்டுனர்கள் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு மற்றும் ரவிக்குமார், மாவட்ட சி.இ.ஓ., முனிராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு அலுவலர் கவுரிசங்கர் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் கலந்து கொண்டனர்.