/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேர்தல் விதி மீறியதாக 250 பேர் மீது வழக்கு
/
தேர்தல் விதி மீறியதாக 250 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 19, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த பி.அக்ரஹாரம் பஸ் ஸ்டாப் அருகில், தேர்தல் விதிமுறையை மீறி, காங்., கட்சியின் போஸ்டர்கள் ஒட்டியிருப்பதாக, ஓசூர் சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி செந்தில்குமார், கெலமங்கலம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.காவேரிப்பட்டணத்தில் நேற்று முன்தினம் அனுமதியின்றி தேர்தல் பரப்புரை நடத்தியதாக கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபிரகாஷ் மற்றும் நா.த.க., கட்சி வேட்பாளர் வித்யாராணி உட்பட, 250க்கும் மேற்பட்டோர் மீது, காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

