/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருது விடும் விழா 3 பேர் மீது வழக்கு
/
எருது விடும் விழா 3 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 21, 2025 03:58 AM
மகாராஜகடை: கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அருகே நாரலப்பள்ளி ஏரிக்கரையில், நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல், எருது விடும் விழா நடத்தப்பட்டது.
இதையறிந்த அப்பகுதி வி.ஏ.ஓ., சுரேஷ்குமார், மகாராஜகடை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, ஏக்கல் நத்தம் கிரா-மத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், 43, சென்னப்பன், 46, சத்திய-மூர்த்தி, 45, ஆகிய, 3 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்து விசா-ரிக்கின்றனர்.மண் கடத்திய லாரி பறிமுதல்
கந்திக்குப்பம், ஜூலை 21
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் தனியார் கல்லுாரி அருகே, பாலிநாயனப்பள்ளி வி.ஏ.ஓ., முத்தம்மாள் மற்றும் வரு-வாய்த்துறை அலுவலர்கள், நேற்று முன்தினம் மதியம் வாகன சோதனை செய்தனர்.
அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், ராசிப்பள்ளி ஏரியில் இருந்து கந்திக்குப்பத்திற்கு, 2 யூனிட் மண் கொண்டு செல்வது தெரிந்தது.
லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள்,
கந்திக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர். லாரி டிரைவரான, மேல்வெங்கடாபுரத்தை சேர்ந்த ராஜா, 38, உரிமையாளரான கெட்டூரை சேர்ந்த உதயகுமார், 36, ஆகியோர் மீது போலீசார்
வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.