/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீச்சரிவாள் தகராறு 4 பேர் மீது வழக்கு
/
வீச்சரிவாள் தகராறு 4 பேர் மீது வழக்கு
ADDED : டிச 26, 2025 06:11 AM
தர்மபுரி: தர்மபுரி சவுளூப்பட்டியை சேர்ந்தவர் சரவணன், 43, இவர், பழைய கோட்டர்ஸ் பகுதியில், 'ரூபேஸ் பாஸ்ட் புட்' என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் இருந்து வெளியேறும் கழிவு நீர், அங்குள்ள கட்டட மேஸ்திரி அம்மாசி, 58, என்பவரது வீட்டின் முன் தேங்கியுள்ளது. இதனால், இருவ-ருக்கும் பிரச்னை இருந்து வந்தது. கடந்த, 9ல் இரவு, 9:00 மணிக்கு அம்மாசி பெரிய வீச்சரிவாளூடன், சரவணனின் 'பாஸ்ட் புட்' கடை அருகே சென்றுள்ளார். அப்போது, அங்கு வேலை செய்து கொண்டிருந்த சரவணன் தரப்பினருக்கும், அம்மாசிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், இருதரப்பினரும் மோதிக் கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்த வீடியோ வைரலா-னது. நேற்று முன்தினம், சரவணன் மற்றும் அம்மாசி இருவரும், அதியமான்கோட்டை போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்படி, சரவணன், முனியம்மாள், 40, தெயவால்கான், 40, மற்றும் அம்மாசி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

