/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மண் மாதிரி சேகரிக்கும் முறை கல்லுாரி மாணவியர் விளக்கம்
/
மண் மாதிரி சேகரிக்கும் முறை கல்லுாரி மாணவியர் விளக்கம்
மண் மாதிரி சேகரிக்கும் முறை கல்லுாரி மாணவியர் விளக்கம்
மண் மாதிரி சேகரிக்கும் முறை கல்லுாரி மாணவியர் விளக்கம்
ADDED : டிச 26, 2025 06:10 AM
கிருஷ்ணகிரி: மண் மாதிரி சேகரிக்கும் முறை பற்றி, தோட்டக்கலைக்கல்லுாரி மாணவியர் விளக்கம் அளித்தனர்.
திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நான்காம் ஆண்டு இளநிலை படிக்கும் மாணவியர், ஊரக தோட்டக்கலை பணி அனுபவத்திற்காக, 45 நாட்கள் கிருஷ்-ணகிரி மாவட்டம் பையூர் தோட்டக்கலைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி, பயிற்சி பெற்று வருகின்றனர். அதன்படி, தேசிய விவசாய தினத்தையொட்டி, எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மையத்தில், வேளாண் இயக்குனர் காளி-முத்து, தலைவர் மற்றும் பேராசிரியர் சுந்தர்ராஜ் ஆகியோர் தலை-மையில், மண் பரிசோதனைக்கு மண் மாதிரி சேகரிக்கும் முறை பற்றியும், களை மேலாண்மை முறைகள் பற்றியும் செய்முறை விளக்கம் அளித்தனர். அப்போது, மண் மாதிரி எடுத்தல் என்பது, விவசாய துறையில் மண்ணின் ஊட்டச்சத்து, தரம் மற்றும் இயற்பியல் பண்புகளை புரிந்து கொள்ள உதவுகிறது. அதன் மாதிரிகளை சேகரித்து, மண்ணின் ஆரோக்கியத்தை கண்டறியவும், சரியான உரங்களை பயன்படுத்தவும் உதவுகிறது. பொதுவாக அனைத்து பயிர்களும், 15 செ.மீ., ஆழத்திலிருந்து மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. களை மேலாண்மையில் பயிர் சுழற்சி, மூடு பயிர், ஊடுபயிர், மண் வெப்பமூட்டல், நில போர்வை பற்றி, விளக்கம் அளித்தனர்.

