sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூர் சிப்காட் ஜங்ஷன் மேம்பாலம் திறப்பு இன்னர் ரிங்ரோட்டில் முடங்கிய போக்குவரத்து

/

ஓசூர் சிப்காட் ஜங்ஷன் மேம்பாலம் திறப்பு இன்னர் ரிங்ரோட்டில் முடங்கிய போக்குவரத்து

ஓசூர் சிப்காட் ஜங்ஷன் மேம்பாலம் திறப்பு இன்னர் ரிங்ரோட்டில் முடங்கிய போக்குவரத்து

ஓசூர் சிப்காட் ஜங்ஷன் மேம்பாலம் திறப்பு இன்னர் ரிங்ரோட்டில் முடங்கிய போக்குவரத்து


ADDED : டிச 26, 2025 06:06 AM

Google News

ADDED : டிச 26, 2025 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர், சிப்காட் ஜங்ஷன் மேம்பாலம் திறக்கப்பட்டுள்ள நிலையில், 'யூ டர்ன்' மூடப்பட்டுள்ளதால், இன்னர் ரிங்ரோட்டில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சீத்தாராம்மேட்டிலிருந்து, இ.எஸ்.ஐ., மருத்துவமனை வரை, 8.8 கி.மீ., துாரத்திற்கு இன்னர் ரிங்ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை கடந்த சில ஆண்டுக்கு முன், சீத்தாராம் மேடு முதல், பவானி திருமண மண்-டபம் வரையும், தளி ரயில்வே கேட்டிலிருந்து, இ.எஸ்.ஐ., மருத்-துவமனை வரையும், 90 கோடி ரூபாய் மதிப்பில், இருவழிச்-சாலை, நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. பெங்களூரு நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் பெங்களூருவிலிருந்து ஓசூர் நோக்கி வரும் வாகனங்கள், ஓசூர் நகருக்குள் வந்தால், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்து, இந்த இன்னர் ரிங்ரோடு அமைக்கப்பட்டுள்ளது.பெங்களூருவிலிருந்து வரும் வாகனங்கள், தளி, தேன்கனிக்-கோட்டை போன்ற பகுதிகளுக்கு, இன்னர் ரிங்ரோட்டிலேயே சென்று விடலாம். வாகன ஓட்டிகளுக்கு இச்சாலை பெரிதும் உத-வியாக உள்ளது. ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் பழுதானபோது, இந்த இன்னர் ரிங்-ரோடு இருந்ததால், போக்குவரத்தை மாற்றியமைக்க உதவியாக இருந்தது. அப்படிப்பட்ட இந்த இன்னர் ரிங்ரோடு, தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சரியான திட்டமிடல் இல்லாமல், ஓசூர் சிப்காட் ஜங்ஷன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேம்பா-லத்தால், தற்போது முடங்கி போகியுள்ளது.

அதாவது, ஓசூர் இன்னர் ரிங்ரோடு, புதிதாக அமைக்கப்பட்-டுள்ள சிப்காட் ஜங்ஷன் மேம்பாலம் முன் வந்து, தேசிய நெடுஞ்-சாலையுடன் இணைகிறது. அதனால் இப்பகுதியில் 'யூ டர்ன்' போடப்பட்டிருந்தது. அதன் மூலம், பெங்களூருவிலிருந்து வரும் வாகனங்கள், இன்னர் ரிங்ரோட்டில் திரும்பி செல்ல முடிந்தது. தற்போது புதிய பாலத்தால், அதில் அதிவேகமாக வரும் வாக-னங்கள், இ.எஸ்.ஐ., ரிங்ரோட்டில் திரும்பும் வாகனங்கள் மீது மோதி, விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. அதனால், சாலையின் குறுக்கே உள்ள 'யூ டர்ன்' தற்போது மூடப்பட்டு விட்-டது. அதனால், பெங்களூருவிலிருந்து வரும் வாகனங்கள், மூக்-கண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்திற்கு கீழே சென்று திரும்பி, சர்வீஸ் சாலையில் வந்து, இன்னர் ரிங்ரோட்டில் பயணிக்க வேண்டியுள்ளது.

சுற்றி வர வேண்டியுள்ளதாலும், கனரக லாரிகள் மேம்பாலத்திற்கு அடியில் திரும்பாது என்பதாலும், மூக்கண்டப்பள்ளி சர்வீஸ் சாலையில் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பாலும், அவ்வழியாக சென்று, ரிங்ரோட்டிற்கு வர, வாகன ஓட்டிகள் தயங்குகின்றனர். பெங்களூருவில் இருந்து வரும் வாகனங்கள், இன்னர் ரிங்-ரோட்டில் செல்வதை குறைத்து விட்டன. இதனால், நகர் பகு-திக்குள் போக்குவரத்து நெரிசல், நாளுக்கு நாள் அதிகரித்து வருவ-தாக, வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us