/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தகாத உறவால் மோதல் 4 பேர் மீது வழக்கு
/
தகாத உறவால் மோதல் 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 13, 2025 01:16 AM
ஓசூர், சென்னை, ஆவடி, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மதன்குமார், 32. இவர், ஓசூர் அரசனட்டியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்த யோகேஸ்வரி, 25, என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதை கண்டித்தும், இருவரும் கேட்கவில்லை.
இதையறிந்த மதன்குமாரின் மனைவி கவிதா, 29, மற்றும் உறவினர் நேற்று முன்தினம் ஓசூருக்கு வந்து யோகேஸ்வரியிடம் தகராறு செய்துள்ளனர். இரு தரப்பிற்கும் ஏற்பட்ட பிரச்னையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். யோகேஸ்வரி புகார் படி, ஓசூர் சிப்காட் போலீசார் கவிதா, 29, ரேணுகா, 48, மணிகண்டன், 31, ஆகிய மூவர் மீது வழக்குப்பதிந்தனர். அதேபோல கவிதா தரப்பை சேர்ந்த ரேணுகா, 48, புகார் படி, யோகேஸ்வரி மீதும் வழக்குப்பதிந்தனர்.