/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு
/
எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு
ADDED : நவ 10, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குருபரப்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே வசந்தபள்ளி கலாம் நகரில், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல், நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது.
இது தொடர்பாக, குருபரப்பள்ளி ஸ்டேஷன் எஸ்.ஐ., வசந்தா கதிரவன் புகார்படி, விழாவை முன்நின்று நடத்தியதாக, வசந்தப்பள்ளியை சேர்ந்த மகேந்திரன், 31, உட்பட, 5 பேர் மீது, குருபரப்பள்ளி ஸ்டேஷன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

