/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தியேட்டர் ஊழியரை தாக்கிய சகோதரர்கள் மீது வழக்கு
/
தியேட்டர் ஊழியரை தாக்கிய சகோதரர்கள் மீது வழக்கு
ADDED : ஜூலை 29, 2025 01:24 AM
ஓசூர், சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பேளூர் பரசுராம் பிள்ளையார் தெருவை சேர்ந்தவர் ராம்பிரசாத், 31. ஓசூர் அருகே காரப்பள்ளியில் தங்கி, கர்னுாரில் உள்ள கிராண்ட் சினிமா தியேட்டரில் பணியாற்றி வருகிறார்.
கடந்த, 25ம் தேதி இரவு தியேட்டருக்கு படம் பார்க்க வந்திருந்த ஓசூர் முனீஸ்வர் நகரை சேர்ந்த ராம்பிரகாஷ், 32, அவரது தம்பி சிவப்பிரகாஷ், 31, ஆகிய இருவர், பாப்கார்ன் ஆர்டர் செய்து, சீட்டிற்கு எடுத்து வந்து தர கூறியுள்ளார்.
ஆனால், பாப்கார்னை சரியான நேரத்திற்கு வழங்காததால் ராம்பிரசாத்திடம் கேள்வி எழுப்பினர். இதனால் அவர்களுக்குள் வார்த்தை தகராறு ஏற்பட்ட நிலையில், ராம்பிரசாத்தை இருவரும் கையால் தாக்கினர்.
அவர் புகார் படி, ராம்பிரகாஷ், சிவப்பிரகாஷ் ஆகிய, 2 பேர் மீது, மத்திகிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

