/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பா.ம.க., நிர்வாகியை தாக்கிய டிரைவர், கண்டக்டர் மீது வழக்கு
/
பா.ம.க., நிர்வாகியை தாக்கிய டிரைவர், கண்டக்டர் மீது வழக்கு
பா.ம.க., நிர்வாகியை தாக்கிய டிரைவர், கண்டக்டர் மீது வழக்கு
பா.ம.க., நிர்வாகியை தாக்கிய டிரைவர், கண்டக்டர் மீது வழக்கு
ADDED : ஜூலை 18, 2025 01:30 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த நெக்குந்தியை சேர்ந்தவர் சந்திரசேகர், பா.ம.க, பிரமுகர், பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளராகவும் உள்ளார். இவர், நேற்று முன்தினம் தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தனியார் பஸ்ஸில் அனுப்பப்பட்ட உர மூட்டை பார்சலை எடுக்க காவேரிப்பட்டணம், பாலக்கோடு பிரிவு சாலையில் நின்றுள்ளார். பஸ் நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து சந்திரசேகர் தன் பைக்கை, பஸ்சுக்கு முன்னால் நிறுத்தி உள்ளார்.
அப்போது டிரைவர், கண்டக்டர் இருவரும் எங்களுக்கே நேரமாகி விட்டது, 'என்ன பெரிய உர மூட்டை, போடா' எனக்கூறி ஆபாசமாக திட்டி அடித்துள்ளனர். சந்திரசேகர் புகார் படி, தனியார் பஸ் கண்டக்டர் ஆனந்தன், 40, டிரைவர் மஞ்சுநாத், 35, ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.