/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பஸ்சில் சீட் பிடிப்பதில் தகராறு மாணவியை கடித்தவர் மீது வழக்கு
/
பஸ்சில் சீட் பிடிப்பதில் தகராறு மாணவியை கடித்தவர் மீது வழக்கு
பஸ்சில் சீட் பிடிப்பதில் தகராறு மாணவியை கடித்தவர் மீது வழக்கு
பஸ்சில் சீட் பிடிப்பதில் தகராறு மாணவியை கடித்தவர் மீது வழக்கு
ADDED : டிச 26, 2024 01:12 AM
ஓசூர், டிச. 26-
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த பாலதொட்டனப்பள்ளி அருகே கெம்பத்பள்ளியை சேர்ந்த, 17 வயது சிறுமி; தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். கடந்த, 21 காலை, 8:00 மணிக்கு, கெம்பத்பள்ளி பஸ் ஸ்டாப்பில், மாணவி மற்றும் அதே பள்ளியில் படிக்கும் அவரது தம்பியான, 14 வயது சிறுவன் ஆகியோர், பள்ளி செல்ல, 42 ம் நம்பர் அரசு டவுன் பஸ்சில் ஏறினர். முதலில் ஏறிய சிறுவன், தன் அக்காவிற்காக இடம் போட்டார். அந்த இடத்தில், கெம்பத்பள்ளியை சேர்ந்த அந்தோணிசாமி மனைவி பிரமிளா, 44,  அமர வந்தார்.
அதற்கு சிறுவன், தனது அக்கா அமர சீட் பிடித்துள்ளேன் எனக் கூறியுள்ளார். இதனால் சிறுவனுக்கும், பிரமிளாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதை பார்த்த மாணவி, தன் தம்பியை அடிக்க விடாமல் தடுத்த போது, மாணவியின் இடது கையில் பிரமிளா கடித்ததுடன், தகாத வார்த்தையால் திட்டி மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த மாணவி கொடுத்த புகார்படி, பிரமிளா மீது தளி போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.