/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நா.த.க.,வினர் மீது வழக்கு
/
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நா.த.க.,வினர் மீது வழக்கு
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நா.த.க.,வினர் மீது வழக்கு
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நா.த.க.,வினர் மீது வழக்கு
ADDED : ஜூலை 15, 2025 01:12 AM
அஞ்செட்டி, அஞ்செட்டி அருகே, மாவனட்டி மலை கிராமத்ளதை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவராஜ் மகன் ரோகித், 13. அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 2ம் தேதி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக, மாவனட்டியை சேர்ந்த புட்டண்ணன் மகன் மாதேவன், கர்நாடகா மாநிலம், உன்சனஹள்ளியை சேர்ந்த மாரப்பன் மகன் மாதேவன் மற்றும் கல்லுாரி மாணவி உட்பட, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாணவன் கொலையை கண்டித்து, அஞ்செட்டி பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி, ஒன்றிய செயலாளர் ஞானசந்திரன் உட்பட, 14 பேர் மீது, அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.