ADDED : ஜூலை 02, 2026 01:45 AM
ஓசூர்: கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே எலவங்கா பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், 22. கடந்தாண்டு வழிப் பறியில் ஈடுபட்ட-தாக, மத்திகிரி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தினமும் ஸ்டேஷனில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன், நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று வெளியே வந்தார். ஆனால், ஸ்டேஷனில் ஆஜராகி கையெழுத்திட-வில்லை. அதனால், மத்திகிரி ஸ்டேஷன் தலைமை காவலர் தமி-ழரசன் புகார் படி, சீனிவாசன் மீது வழக்குப்பதிந்து, போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், சித்துார் அருகே மதனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அமர்நாத், 28. ஓசூர் ராம்நகரில் வசிக்கிறார். கடந்த, 2015ம் ஆண்டு, சிப்காட் போலீசாரால், இவர் மீது திருட்டு வழக்-குப்பதிந்து கைது செய்யப்பட்டார்.நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று வெளியே வந்த அமர்நாத், அதன் பின் வழக்கு விசாரணைக்கு, ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜராக-வில்லை. அதனால், ஓசூர் சிப்காட் ஸ்டேஷன் தலைமை காவலர் ராதா புகார் படி, அமர்நாத் மீது வழக்குப்பதிந்து, போலீசார் தேடி
வருகின்றனர்.
பாகலுார் அருகே, ஒட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனி-யப்பா, 61. கடந்த, 1999ம் ஆண்டு இவர் மீது, பாகலுார் போலீ-சாரால் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளியே வந்த முனியப்பா, அதன் பின் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராக-வில்லை. இது தொடர்பாக, பாகலுார் ஸ்டேஷன் காவலர் சுரேஷ் புகார் படி, முனியப்பா மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
