ADDED : ஜூலை 02, 2026 01:44 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில், மருத்-துவர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
வட்டார மருத்துவ அலுவலர் நித்யா தலைமை வகித்தார். மருத்துவர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். விழாவில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கேக் வெட்டி மருத்துவர் தினத்தை கொண்டாடினர். பின்னர், மருத்துவர் சோமசுந்தரம் பேசுகையில், ''மருத்துவ பணியை சேவையாக கருதி, நோயாளிகளுக்கு தரமான மற்றும் மனிதநேயத்துடன் கூடிய சிகிச்சையை வழங்க, நாம் அனை-வரும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்,'' என்றார்.
மருத்துவத்துறையில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்பை அவர் பாராட்டினார்.
