/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரிலிருந்து புறப்பட்ட காவிரி ரத யாத்திரை
/
ஓசூரிலிருந்து புறப்பட்ட காவிரி ரத யாத்திரை
ADDED : அக் 30, 2025 01:36 AM
ஓசூர், நீர்நிலைகளை துாய்மையாக வைத்து கொள்ள வேண்டும், அதை வணங்க வேண்டும், மேலும் குப்பை கொட்டாமல் பாதுகாக்க வலியுறுத்தி, அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், 15ம் ஆண்டு காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரை, கர்நாடகா மாநிலம், தலைகாவிரியில் இருந்து கடந்த, 24ம் தேதி புறப்பட்டது. கடந்த, 27 மற்றும் 28 என இரு நாட்கள், தமிழக எல்லையான ஓசூரில் பல்வேறு இடங்களுக்கு காவிரி ரதம் சென்றது.
ஓசூரிலிருந்து நேற்று காலை புறப்பட்ட ரதம், ராயக்கோட்டை வழியாக, தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் பகுதிக்கு சென்றது. அங்கு நேற்று மாலை காவிரி ஆற்றங்கரையோரம் கங்கா ஆரத்தி நடந்தது. மேட்டூர், ஈரோடு, சேலம், திருச்செங்கோடு, கரூர் என, காவிரி கரையோர பகுதி வழியாக வரும் நவ., 16ம் தேதி, பூம்புகார் சென்று காவிரி ரத யாத்திரை நிறைவு பெறுகிறது.
செய்தார். போலீசார் தேடி வருகின்றனர்.

