ADDED : அக் 30, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பெத்தசிகரலப்பள்ளி அருகே கொட்டாவூரை சேர்ந்தவர் பூங்கன், 55. கடந்த மே, 29ம் தேதி, குடும்ப தகராறு காரணமாக, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது மருமகள் விஜயலட்சுமி, 35, சூளகிரி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் தேடி வருகின்றனர்.
ராயக்கோட்டை அடுத்த கொப்பக்கரை அருகே முகளூரை சேர்ந்தவர் பெருமாள், 65. கடந்த, 23ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மகன் அமரேசன், 38, ராயக்கோட்டை போலீசில் நேற்று முன்தினம் புகார்

