/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காவேரிப்பட்டணம் ஒன்றிய குழுக்கூட்டம்
/
காவேரிப்பட்டணம் ஒன்றிய குழுக்கூட்டம்
ADDED : டிச 12, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, டிச. 12-
காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., அலுவலகத்தில், 29-வது ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றிய குழுத் தலைவர் பையூர் ரவி தலைமையில் நேற்று நடந்தது. பி.டி.ஓ.,க்கள்
சரவணன், சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மக்களுக்காக சிறப்பாக பணியாற்றிய ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும், ஒன்றிய குழுத்தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். கூட்டத்தில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய பொறியாளர்கள், அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். ஒன்றிய குழு துணைத்தலைவர்
சசிகலா தசரா நன்றி கூறினார்.