/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பலாத்கார வழக்கில் சந்தேகங்களை தீர்க்க சி.பி.சி.ஐ.டி., விசாரணை தேவை'
/
'கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பலாத்கார வழக்கில் சந்தேகங்களை தீர்க்க சி.பி.சி.ஐ.டி., விசாரணை தேவை'
'கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பலாத்கார வழக்கில் சந்தேகங்களை தீர்க்க சி.பி.சி.ஐ.டி., விசாரணை தேவை'
'கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பலாத்கார வழக்கில் சந்தேகங்களை தீர்க்க சி.பி.சி.ஐ.டி., விசாரணை தேவை'
ADDED : செப் 21, 2024 10:19 PM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் தனியார் பள்ளியில், என்.சி.சி., முகாம் என்ற பெயரில், பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், 'மனிதம்' அமைப்பினர் உண்மை கண்டறியும் குழுவை அமைத்தனர். இவர்களது அறிக்கையை கிருஷ்ணகிரியில் வெளியிட்டனர்.
மனிதம் அமைப்பின் மாநில தலைவர் ரமேஷ்பாபு, பழங்குடியின மக்கள் சங்க மாநில தலைவர் டில்லிபாபு முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூ., மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி தலைமை வகித்தார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
'மனிதம்' அமைப்புடன் மார்க்சிஸ்ட் கம்யூ., இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி பலாத்கார வழக்கு குறித்து விசாரிக்க, உண்மை கண்டறியும் குழு அமைத்தது. இதில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.
போலி என்.சி.சி., முகாம் நடத்தி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிவராமன் கைது செய்யப்பட்டார். போலீஸ் வழக்கமாக கூறுவது போல, அவர் தப்பிக்க முயன்ற போது கால் முறிந்ததாக கூறினர். கைதாவதற்கு முன் எலி மருந்து சாப்பிட்டதாக போலீசார் கூறினர். இந்நிலையில், கடந்த மாதம், 23ல் அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இறந்தார்.
செல்வாக்கு படைத்தவர்களை காப்பாற்ற, சிவராமனுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டதா என்பதும் புரியவில்லை. சிவராமன் நடத்திய போலி முகாமில் போலீசாரும் கலந்து கொண்டுள்ளனர்.
எனவே, இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இவற்றை முறையாக விசாரிக்க, வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற வேண்டும்.
எங்களது உண்மை கண்டறியும் குழுவின் விசாரணையில் கிடைத்த தகவல்களையும், மேற்கொள்ள வேண்டிய இது போன்ற நடவடிக்கைகளையும், தமிழக அரசுக்கு அறிக்கையாக சமர்பிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட மார்க்சிஸ்ட் மாவட்ட செயலர் நஞ்சுண்டன் மற்றும் மனிதம் அமைப்பினர் உள்பட பலர் உடனிருந்தனர்.