/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.9 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை பணி
/
ரூ.9 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை பணி
ADDED : நவ 18, 2024 01:48 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்றியம், மோரமடுகு கிராமத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டம், 2024 - 2025ம் ஆண்டு நிதி, 6 லட்சம் ரூபாய் மதிப்பில், செல்லப்பன் வீடு முதல் மோரமடுகு பஸ் நிறுத்தம் வரை சிமென்ட் சாலை, 3 லட்சம் ரூபாய் மதிப்பில், அப்பாவு வீடு முதல் தனுஷ்கோடி வீடுவரை சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது.
இதற்கான பணிகளை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் பூஜை செய்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்கடி ராஜன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆஜி, பஞ்., தலைவர் பிரதாப், எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட செயலாளர் கார்த்திக் பால்ராஜ், கவுன்சிலர் மகேந்திரன், முன்னாள் பஞ்., தலைவர் முனிராஜ், ஒப்பந்ததாரர் சம்பத் உள்-பட பலர் பங்கேற்றனர்.