ADDED : ஆக 19, 2025 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே இட்டிப்பள்ளிகுட்டா கிராமத்தில், வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 6.75 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணியை, வேப்பனஹள்ளி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., முனுசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். சூளகிரி வடக்கு ஒன்றிய செயலாளர் பாபு வெங்கடாசலம், அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ராமு, ஒன்றிய செயலாளர்கள் மாதேஷ், சைலேஷ், பொருளாளர் நாராயணப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.

