/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பர்கூர் கூட்டுறவு ஐ.டி.ஐ.,யில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்
/
பர்கூர் கூட்டுறவு ஐ.டி.ஐ.,யில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்
பர்கூர் கூட்டுறவு ஐ.டி.ஐ.,யில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்
பர்கூர் கூட்டுறவு ஐ.டி.ஐ.,யில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்
ADDED : அக் 27, 2024 01:03 AM
பர்கூர் கூட்டுறவு ஐ.டி.ஐ.,யில்
பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்
கிருஷ்ணகிரி, அக். 27-
பர்கூர் கூட்டுறவு ஐ.டி.ஐ., நிலையத்தில் தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் கூட்டுறவு ஐ.டி.ஐ., நிலையத்தில் 2023 -- 24ல் தொழிற்பயிற்சி தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் தொழில் பிரிவு வாரியாக, முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு மெரிட் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. பயிற்சி அலுவலர் சுந்தரபாண்டியன் வரவேற்றார். முதல்வர் சுப்பிரமணி தலைமை வகித்து, தொழிற்பயிற்சியின் நன்மைகள், பலன்கள் குறித்து பேசினார். பி.ஆர்.ஜி., மாதேப்பள்ளி பஞ்., தலைவர் கோவிந்தராஜ், தாமரை இண்டேன் காஸ் உரிமையாளர் தமிழ்செல்வன் ஆகியோர், 60 பேருக்கு பயிற்சி முடித்த சான்றிழ்களை வழங்கினர்.
கூட்டுறவு மேலா ண்மை நிலைய முதல்வர் சாஸ்திரி, வேலைவாய்ப்பு திறன் பயிற்றுனர் ரஞ்சனி பிரியா, பயிற்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.