/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரிக்கு மாநகராட்சியின் பாராட்டு சான்றிதழ்

ADDED : செப் 28, 2025 02:03 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் மூலம், 'துாய்மையே சேவை - 2025' என்ற தலைப்பில், 'எனது குப்பை, எனது பொறுப்பு' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தினேஷ்பாபு வழிகாட்டுதலில், அஜித், பூவரசன் ஆகியோர் செயல்பட்டு, துாய்மை பணியில் சிறந்து விழங்கினர். அவர்களின் பங்களிப்பை பாராட்டி, மாநகராட்சி நிர்வாகம் மூலம், மாநகர நல அலுவலர் அஜிதா, பாராட்டு
சான்றிதழ்களை வழங்கினார்.
திறமையாக செயல்பட்ட மாணவர்களை, அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) பாலாஜி பிரகாஷ் பாராட்டினார். மேலும், கல்லுாரி நிர்வாகம் சார்பில் துாய்மை பணியில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு, கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) பாலாஜி பிரகாஷ் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.