ADDED : மே 01, 2024 02:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: பர்கூர்
அடுத்த பெருகோபனப்பள்ளியை சேர்ந்தவர் அருள்சத்யா, 32;
கொடமாண்டப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக
பணிபுரிகிறார். இவர், நேற்று முன்தினம் மதியம், டி.வி.எஸ்.,
ஸ்கூட்டியில் மத்துார் அருகே கிருஷ்ணகிரி சாலையில் சென்றுள்ளார்.
அப்போது
பஜாஜ் பல்சரில் பின்னால் வந்த இருவர், அருள்சத்யாவின்
கழுத்திலிருந்த மூன்றே முக்கால் பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்
கொண்டு தப்பினர். புகார் படி மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.