/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் கோதண்டராமர் கோவிலில் சண்டியாகம்
/
ஓசூர் கோதண்டராமர் கோவிலில் சண்டியாகம்
ADDED : அக் 21, 2024 07:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நேதாஜி சாலையில் கோதண்டராமர் கோவில் உள்ளது. இங்கு உலக மக்கள் அமைதியாகவும், நோய், நொடியின்றி வாழவும் வேண்டி, 15ம் ஆண்டு சண்டியாகம் நேற்று நடந்தது. 10 வயதிற்கு உட்-பட்ட பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, பாத பூஜை செய்யப்பட்டது.
கோதண்டராம சுவா-மிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்-பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, சாய்நாத், நீலகண்டன், கோவில் பட்டாச்சாரியர் கேசவன், ஆலய அர்ச்-சகர் ரகுராமன் உட்பட பலர் செய்திருந்தனர்.

