/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாவத்துார் ஏரியில் மீன்களுக்கு உணவாக கோழிக்குஞ்சுகள்
/
மாவத்துார் ஏரியில் மீன்களுக்கு உணவாக கோழிக்குஞ்சுகள்
மாவத்துார் ஏரியில் மீன்களுக்கு உணவாக கோழிக்குஞ்சுகள்
மாவத்துார் ஏரியில் மீன்களுக்கு உணவாக கோழிக்குஞ்சுகள்
ADDED : நவ 11, 2025 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, மாவத்துார் கிராமத்தில், 45 ஏக்கர் பரப்பளவில் மாவத்துார் ஏரி உள்ளது. இதில், மீன்பிடி குத்தகை ஏலம் எடுத்த நபர்கள், கடந்த, 8ம் தேதி இறந்த கோழிக்குஞ்சுகளை வாங்கி வந்து,
மீன்களுக்கு உணவாக ஏரியில் கொட்டி உள்ளனர். இதனால், மாவத்துார் மற்றும் சுற்று வட்டாரத்தில் கடந்த, 3 நாட்களாக அதிகளவு துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், ஏரியிலுள்ள தண்ணீர் மாசடைந்து, சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.