/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பொங்கல் தொகுப்புடன் மண் பானை அடுப்பு வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
/
பொங்கல் தொகுப்புடன் மண் பானை அடுப்பு வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
பொங்கல் தொகுப்புடன் மண் பானை அடுப்பு வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
பொங்கல் தொகுப்புடன் மண் பானை அடுப்பு வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
ADDED : நவ 11, 2025 02:14 AM
கிருஷ்ணகிரி, தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் தேவேந்திரன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் நேற்று பேரணியாக வந்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதில், அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது அனைத்து ரேஷன் அட்டைக்கும் இலவசமாக கரும்பு, சர்க்கரை, அரிசி, வெல்லம், வேட்டி, சேலை ஆகியவற்றை வழங்கி வருகிறது. அதேபோல், மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க, வரும் பொங்கல் பண்டிகைக்கு, பொங்கல் தொகுப்புடன், மண்பானை மற்றும் மண் அடுப்பையும் இலவசமாக, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வழங்க வேண்டும்.
மண்பாண்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரணமாக வழங்கப்படும், 5,000 ரூபாயை, 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். பல தலைமுறைகளாக ஒரே இடத்தில் அமர்ந்து, தொழில் செய்து வரும் இடத்திற்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, ஜாதிவாரியாக கணக்கெடுக்க வேண்டும். ஏரி, குளங்களில் களிமண் எடுக்க, மண்பாண்ட தொழிலாளர்களுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், தர்மபுரி மாவட்ட கலெக்டரிடம், மண்பாண்ட தொழிலாளர்கள் நேற்று மனு அளித்தனர்.

