/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
20 அடி பள்ளத்தில் விழுந்த தலைமை காவலர் காயம்
/
20 அடி பள்ளத்தில் விழுந்த தலைமை காவலர் காயம்
ADDED : டிச 05, 2024 07:11 AM
ஓசூர்: தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியை சேர்ந்தவர் ரவி, 42. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஸ்டேஷனில்
தலைமை காவல-ராக பணியாற்றி வருகிறார்; நேற்று முன்தினம் நள்ளிரவு ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய
நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்-டிருந்தார்.சுண்டகிரி அருகே டீ குடிக்க நடந்து சாலையை கடந்த போது, இரு சாலைகளுக்கு நடுவே, மரக்கன்றுகள் வைக்க
விடப்பட்-டுள்ள பகுதியில் இருந்த சாக்கடை கால்வாயின், 20 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்.இதில், இடது கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம-டைந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர்,
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சி-கிச்சைக்காக, கோவை தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்-பட்டுள்ளார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.