/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேளாண் திட்டம், புதிய கட்டடங்களை காணொலியில் திறந்து வைத்த முதல்வர்
/
வேளாண் திட்டம், புதிய கட்டடங்களை காணொலியில் திறந்து வைத்த முதல்வர்
வேளாண் திட்டம், புதிய கட்டடங்களை காணொலியில் திறந்து வைத்த முதல்வர்
வேளாண் திட்டம், புதிய கட்டடங்களை காணொலியில் திறந்து வைத்த முதல்வர்
ADDED : மே 30, 2025 01:06 AM
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி, ஓசூர், ஊத்தங்கரையில் வேளாண் திட்டம், புதிய கட்டடங்களை, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்.
உழவரை தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை திட்டத்தை சென்னையில் இருந்து காணொலியில் நேற்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் நகராட்சி நிர்வாக துறை சார்பில் ஓசூர் மாநகராட்சியில் வணிக வளாகங்கள், ஊத்தங்கரையில், 1.46 கோடி ரூபாய் மதிப்பில் அறிவுசார் மையத்தையும் திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி ஒன்றியம் அகசிப்பள்ளி பஞ்.,ல், மாநில எண்ணெய் வித்து நிலையத்தில் நடந்த விழாவில், கலெக்டர் தினேஷ்குமார், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் கலந்து கொண்டு, உழவரை தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை திட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, 8 பேருக்கு, 4.98 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில், கலெக்டர் தினேஷ்குமார் பேசியதாவது:
விவசாயிகளை, அவர்களின் கிராமங்களில் நேரடியாக சந்தித்து, அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கும் வகையில், இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. பயிர் சார்ந்த தொழில் நுட்பங்கள், வேளாண் சார்ந்த திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறப்படுகிறது. மாதம் 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் முகாம்கள் நடக்க உள்ளது. முகாமில் நவீன வேளாண் தொழில் நுட்பங்கள், வேளாண் சாகுபடி குறித்த வழிகாட்டுதல்கள், உட்பட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் இதை பயன்படுத்தி, வேளாண் பரப்பை அதிகரிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.