sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூரில் 'அன்புச்சோலை' மையம் காணொலியில் முதல்வர் துவக்கம்

/

ஓசூரில் 'அன்புச்சோலை' மையம் காணொலியில் முதல்வர் துவக்கம்

ஓசூரில் 'அன்புச்சோலை' மையம் காணொலியில் முதல்வர் துவக்கம்

ஓசூரில் 'அன்புச்சோலை' மையம் காணொலியில் முதல்வர் துவக்கம்


ADDED : நவ 11, 2025 06:36 AM

Google News

ADDED : நவ 11, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தர்கா அருகே, நகர்புற வாழ்வாதார இயக்க கட்ட-டத்தில், 'ஆராதனா' தொண்டு நிறுவனம் மூலம் முதியவர்கள் பராமரிக்கப்படுகின்-றனர். இங்கு, மூத்த குடிமக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 'அன்புச்சோலை' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று, திருச்சியில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகா-தார குழு தலைவர் மாதேஸ்வரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். முதியோர்-களுக்கு சால்வை அணிவித்து, பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

இம்மையத்தில் தினமும் காலை முதல், மாலை வரை முதியவர்கள் பொழுதுப்-போக்கு அம்சங்களான பல்லாங்குழி, கேரம், செஸ் மற்றும் நவீன பிசியோதெரபி உப-கரணங்கள், யோகா, உடற்பயிற்சி, நுாலகம், இயன்முறை மருத்துவ சேவைகளை இலவசமாக பெற முடியும். மேலும், குறிப்பிட்ட நாளில் மையத்திற்கு வருகை தரும் முதியவர்களுக்கு, மதிய உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்படும் என, தெரிவிக்-கப்பட்டுள்ளது.முதியோர்களுக்கான சுகாதார பரிசோதனைகளுக்கு, அருகிலுள்ள நகர்புற ஆரம்ப சுகாதார மையங்களின் சேவைகள் பயன்படுத்தப்படும் என, மாவட்ட கலெக்டர் தெரி-வித்துள்ளார். ஓசூர் சப்-கலெக்டர் ஆக்ரிதி சேத்தி, மாநகராட்சி கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம், மாவட்ட சமூக நல அலுவலர் சக்தி சுபாஷினி, 'ஆராதனா' தொண்டு நிறுவன நிர்வாகி ராதா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us