/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்
/
21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்
21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்
21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஜூன் 26, 2025 01:24 AM
வேலுார், வேலுார் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், ஒரு முறை சிறப்பு வரன்முறை படுத்தும் திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களில், 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
வேலுாரில் நேற்று, முதல்வர் ஸ்டாலின் தங்கியிருந்த சுற்றுலா மாளிகையில், வேலுார் மாவட்ட வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்களில், ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில், 5 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசிக்கும் நபர்களுக்கு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், ஒரு முறை சிறப்பு வரன்முறை திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களில், நிலங்களை வரன்முறை செய்து, 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்குவதன் அடையாளமாக, 12 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
இதனிடையே முதல்வர் ஸ்டாலின், வேலுார் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, காட்பாடி அடுத்த சேர்க்காடு கிராமத்தை சேர்ந்த பெண் பொற்செல்வி என்பவர், அவரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அதில், தான் ஆதரவற்ற, வறுமையான சூழ்நிலையில் கஷ்டப்படுவதாகவும், தனக்கு, 2 பெண் குழந்தை இருப்பதாகவும், கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பற்றி வருவதாகவும், தனக்கு ஏதேனும் ஒரு அரசு பணி வழங்க, மனு அளித்தார்.
மனுவை பெற்ற முதல்வர் ஸ்டாலின், சில மணி நேரங்களில் அவருக்கு, 17,000 ரூபாய் சம்பளத்தில், காட்பாடி அன்னை சத்யா காப்பக விடுதி காவலருக்கான பணி நியமன ஆணையை வழங்கினார். மனு அளித்த சில மணி நேரங்களில், பணி நியமன ஆணை கிடைத்ததால், அதை பெற்ற பொற்செல்வி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்
அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், வேலு, காந்தி, எம்.பி.,க்கள், ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், வேலுார் கலெக்டர் சுப்புலெட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.