ADDED : ஆக 06, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், திருவண்ணாமலை மாவட்டம், ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன், 32. டிரைவர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டி.வி.எஸ்., நகர் நகர் விகாஸ் நகர் லேக் அவென்யூ பகுதியில் வசிக்கிறார். இவருக்கு, இரண்டரை வயதில் பைரவன் என்ற ஆண் குழந்தை இருந்தது. கடந்த, 31ம் தேதி காலை, 7:40 மணிக்கு, வீட்டு குளியலறையில் இருந்த வெந்நீர் குழந்தை மீது கொட்டியது.
இதில் படுகாயமடைந்த குழந்தையை மீட்ட பெற்றோர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த குழந்தை பைரவன், நேற்று முன்தினம் காலை உயிரிழந்தது. மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்

