/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேன் சக்கரத்தில் சிக்கிய குழந்தை பலி; டிரைவர் கைது
/
வேன் சக்கரத்தில் சிக்கிய குழந்தை பலி; டிரைவர் கைது
வேன் சக்கரத்தில் சிக்கிய குழந்தை பலி; டிரைவர் கைது
வேன் சக்கரத்தில் சிக்கிய குழந்தை பலி; டிரைவர் கைது
ADDED : ஆக 07, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை அருகே சீகோட்டையை சேர்ந்தவர் ஜான்பாஷா மகள் ஆபியா, 3. நேற்று முன்தினம் மாலை, 5:10 மணிக்கு, தனியார் பள்ளி சென்ற தன் அக்கா வேனில் வந்து இறங்குவதை பார்த்து ஓடிச் சென்றாள். வேனில் முன் சக்கரம் அருகே குழந்தை ஆபியா நின்றிருந்த நிலையில், டிரைவர், வேனை எடுத்த போது, முன் சக்கரத்தில் சிக்கி குழந்தை ஆபியா பலியானாள்.
ஆத்திரமடைந்த குழந்தையின் உறவினர்கள், தேன்கனிக்கோட்டையில் நேற்று முன்தினம் இரவு சாலைமறியலில் ஈடுபட்டனர். வேன் டிரைவரான குந்துக்கோட்டையை சேர்ந்த சுரேஷ், 37, என்பவரை நேற்று தேன்கனிக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.