/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை
/
பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை
பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை
பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை
ADDED : ஆக 07, 2025 01:02 AM
கிருஷ்ணகிரி, பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில், மாணவ, மாணவியர் நேரடி சேர்க்கை நடக்கிறது.
இது குறித்து, தொழிற்பயிற்சி நிலைய உதவி இயக்குனர் சுப்ரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ.,)ல், 2025-2026ம் கல்வியாண்டில், அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத ஒரு சில இடங்களுக்கு, நிர்வாக இட ஒதுக்கீட்டில் நேரடி சேர்க்கை நடக்கிறது.
அதில், மின் பணியாளர் தொழிற்பிரிவு, 2 ஆண்டு தொழிற்பயிற்சி, கணினி இயக்குனர் மற்றும் திட்ட உதவியாளர், ஓராண்டு பயிற்சி, அனைத்து பிரிவினருக்கும் சேர்க்கை நடக்கிறது. பயிற்சி முடித்தவுடன் ஓசூரிலுள்ள முன்னணி நிறுவனங்களில் அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சி, சம்பளத்துடன் பெற்று தரப்படும். பயிற்சியின்போது இன்பிளான்ட் டிரெயினிங், புராஜக்ட் செய்ய கற்றுத்தரப்படும். அரசு நிதியுதவி பள்ளியில் படித்த மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும் வங்கி கணக்கில், 1,000 ரூபாய் பெற்றுத் தரப்படும்.
பயிற்சி கட்டணத்தை அரசே ஏற்பதால், 1,275 ரூபாய் மட்டும் செலுத்தி சேர்ந்து கொள்ளலாம். ஆண்கள், 40 வயதும், பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், டி.சி., ஜாதி சான்றிதழின் அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை (விண்ணப்பதாரர் மற்றும் அவரின் பெற்றோர்) 2 நகல்கள், ஆகியவற்றுடன் பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து சேர்ந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 04343-265652, 94885 14147 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.