/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குழந்தை பாதுகாப்பு குழு கூட்டம்
/
குழந்தை பாதுகாப்பு குழு கூட்டம்
ADDED : ஜூலை 01, 2025 01:11 AM
தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், தேன்கனிக்கோட்டையில் டவுன் பஞ்., அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. செயல் அலுவலர் மஞ்சுநாத் தலைமை வகித்தார். எஸ்.எஸ்.ஐ., யுவராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்.,ல் உள்ள, 18 வார்டுகளிலும், வார்டு அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைத்து, அதன் விபரத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு சமர்ப்பிப்பது.
1098 என்ற குழந்தைகள் உதவி எண் மற்றும் போக்சோ சட்டம் குறித்து, தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., அலுவலகம் மற்றும் பஸ் ஸ்டாண்டில் விழிப்புணர்வு பலகைகளை வைக்க வேண்டும்.செங்கல்சூளை, மாந்தோப்பு மற்றும் மற்ற இடங்களில் குழந்தை தொழிலாளர்கள், கொத்தடிமைகள் உள்ளார்களா என கண்காணிப்பது என, முடிவு செய்யப்பட்டது.