/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உறவினர் வீட்டு வளர்ப்பு நாய் கடித்ததில் குழந்தை படுகாயம்
/
உறவினர் வீட்டு வளர்ப்பு நாய் கடித்ததில் குழந்தை படுகாயம்
உறவினர் வீட்டு வளர்ப்பு நாய் கடித்ததில் குழந்தை படுகாயம்
உறவினர் வீட்டு வளர்ப்பு நாய் கடித்ததில் குழந்தை படுகாயம்
ADDED : ஜூன் 09, 2025 02:07 AM
ஓசூர்: கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த தம்பதி பிரதாப் - நந்தினி; இவர்களின் 3 வயது குழந்தை அர்ஜுன். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே நாகொண்டப்பள்ளியிலுள்ள உறவினர் வீட்டுக்கு, குழந்தையுடன் நந்தினி வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு, குழந்தை அர்ஜுன் விளையாடியபோது, உறவினரின் வீட்டு வளர்ப்பு நாய் திடீரென குழந்தையை கடித்து குதறியது.
இதில், படுகாயமடைந்த குழந்தையை மீட்டு, அதே பகுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தையின் தலையில், 10 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.