sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூர் கல்யாண காமாட்சியம்மன் கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்த குழந்தைகள்

/

ஓசூர் கல்யாண காமாட்சியம்மன் கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்த குழந்தைகள்

ஓசூர் கல்யாண காமாட்சியம்மன் கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்த குழந்தைகள்

ஓசூர் கல்யாண காமாட்சியம்மன் கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்த குழந்தைகள்


ADDED : ஜூலை 15, 2024 12:17 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூரில், கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் அம்மனுக்கு குழந்தைகள் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.ஓசூர், பாரதிதாசன் நகரிலுள்ள கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில், ஆண்டுக்கு ஒருமுறை, குழந்தைகளே அம்மனுக்கு, அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

கல்வி சிறக்கவும், நோய், நொடியின்றி வாழவும், 6 மாத குழந்தைகள் உட்பட, 7 வயது வரையுள்ள மாணவ, மாணவியர் வரை, அம்மனுக்கு அபி-ஷேகம் செய்கின்றனர். அதன்படி, நேற்று காலை குழந்தைகள், மாணவ, மாணவியர் காலை, 11:00 மணி முதல், ஏகாம்பரேஸ்வரர் கல்யாண காமாட்சி அம்மன் உற்சவ மூர்த்திக்கு, மஞ்சள், பால், பன்னீர் போன்ற, 5 திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். மூலவர் காமாட்சியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக காலை, 8:00 முதல், 10:00 மணி வரை, குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியரின் ஆயுள் விருத்திக்காகவும், ஆரோக்கிய-மாக இருக்கவும் ஆயுஷ் ஹோமம் நடந்தது. ஓசூர் மாநகர மேயர் சத்யா, தி.மு.க., விளையாட்டு அணி மாவட்ட துணை அமைப்-பாளர் மஞ்சுநாதா உட்பட பக்தர்கள் பலர் சுவாமி தரிசனம் செய்-தனர். மேலும், திருமண தடை நீங்கி விரைவில் மண வாழ்க்கை அமைய, பக்தர்கள் பலர் அம்மனுக்கு ஏலக்காய் மாலை சாற்றி வழிபட்டனர். ஏற்பாடுகளை, கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us