UPDATED : நவ 14, 2026 05:12 AM
ADDED : நவ 14, 2026 04:38 AM

கெலமங்கலம்; ஓசூர் தாலுகாவிற்கு உட்பட்ட, 551 அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், தேன்கனிக்கோட்டை தாலுகாவில், 253 அரசு பள்ளிகளில், குழந்தைகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவியருக்கு குழந்தைகள் தின வாழ்த்து அட்டை மற்றும் கேக் வழங்கப்பட்டன.
கெலமங்கலம் ஒன்றியம், தொட்டபேளூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. அதையெட்டி, தலைமையாசிரியர் வெங்கடேசலு தலைமையில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவ, மாணவியருக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கினர்.* ஊத்தங்கரை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு தலைமை ஆசிரியர் பெரியசாமி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர்கள் சக்திவேல், யசோதா மற்றும் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் வெங்கடேசன், மணிமாறன், சரவணன், ஜெயசீலன், செந்தில் ஆகியோர், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேக், வாழ்த்து அட்டை வழங்கப்பட்டன.
