ADDED : ஆக 04, 2026 04:34 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி மாநகராட்சி துவக்கப்பள்ளியில், இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் திவ்யா; இவர் 'குறும்பு உலகம்' என்ற தலைப்பில், குழந்தை பாடல்கள் அடங்கிய புத்தகத்தை எழுதியுள்ளார்.
அதன் வெளியீட்டு விழா, ஓசூர் ஆந்திரசமிதியில் நடந்தது. ஜே.சி.ஐ., முன்னாள் தேசிய துணைத்த-லைவர் எழிலரசன் புத்தகத்தை வெளியிட, பட்ட-தாரி ஆசிரியர் பாலமுருகன் பெற்றுக்கொண்டார்.
பட்டதாரி ஆசிரியை புனிதவள்ளி, ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியை சுதா, பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி தலை-மையாசிரியர் பொன் நாகேஷ், மூக்கண்டப்பள்ளி துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் அப்பையப்பா, ஆசிரிய பயிற்றுனர் செந்தில் உட்பட பலர் பங்-கேற்றனர். மூக்கண்டப்பள்ளி அரசு துவக்கப்பள்ளி ஆசிரியை தமிழரசி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியை நந்தினி நன்றி கூறினார்.
