/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பிரத்யங்கிரா தேவி கோவிலில் மிளகாய் வத்தல் யாகம்
/
பிரத்யங்கிரா தேவி கோவிலில் மிளகாய் வத்தல் யாகம்
ADDED : ஏப் 14, 2025 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் அருகே, மோரனப்பள்ளியில் உள்ள ராகு, கேது அதர்வன மகா பிரத்யங்கிரா தேவி கோவிலில், பங்குனி மாத பவுர்ணமியையொட்டி, நேற்று முன்தினம் இரவு சிறப்பு பூஜை நடந்தன.
தொடர்ந்து, கோவில் வளாகத்திலுள்ள யாக குண்டத்தில், மிளகாய் வத்தல் யாகம் நடந்தது. ஓசூர் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், பில்லி, சூனியம், ஏவல், திருமண தடை, கண் திருஷ்டி விலக, மிளகாய் வத்தலை யாக குண்டத்தில் போட்டு வழிபட்டனர்.

