/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பிரத்யங்கிரா தேவி கோவிலில் மிளகாய் வத்தல் யாகம்
/
பிரத்யங்கிரா தேவி கோவிலில் மிளகாய் வத்தல் யாகம்
ADDED : டிச 06, 2025 03:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மோரனப்பள்ளியில், ராகு, கேது அதர்வன மகா பிரத்யங்கிரா தேவி கோவில் உள்ளது. இங்கு, ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் மிளகாய் வத்தல் யாகம் நடப்பது வழக்கம். பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி நீங்க, பக்தர்கள் இந்த யாகத்தில் பங்கேற்பார்கள்.
கார்த்திகை மாத பவுர்ணமியான நேற்று முன்தினம் இரவு, மிளகாய் வத்தம் யாகம் நடந்தது. இதில், தமிழக எல்லை கிராம மக்கள் மட்டுமின்றி, கர்நாடகா மாநிலத்திலிருந்தும் நுாற்றுக்க-ணக்கான பக்தர்கள் பங்கேற்று, மிளகாய் வத்தலை, யாக குண்-டத்தில் போட்டு வழிபட்டனர்.

