/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தொடர் மழையால் நிரம்பிய சின்னாறு அணை
/
தொடர் மழையால் நிரம்பிய சின்னாறு அணை
ADDED : அக் 25, 2025 01:16 AM
சூளகிரி, சூளகிரி சின்னாறு அணை, தொடர் மழையால் நிரம்பியுள்ள நிலையில், மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள சின்னாறு அணை, தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் அதன் முழு கொள்ளளவான, 32.80 அடியை எட்டியது. அணையிலிருந்து உபரி நீர் சின்னாற்றில் வெளியேறியது.
அதனால் வேம்பள்ளி, பூராகனப்பள்ளி, கொல்லப்பள்ளி, எலசமாகனப்பள்ளி, சென்னப்பள்ளி, சின்னார், பந்தாரகுட்டை, முரசுப்பட்டி, அஞ்சாலம், கொலுசுபள்ளம் ஆகிய, 10 கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், ஆற்றை கடக்க வேண்டாம் எனவும், நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை அணைக்கு, 13 கன அடி நீர் வரத்து இருந்த நிலையில், அது உபரி நீராக சின்னாற்றில் சென்றது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் நேற்று அணையில் ஆய்வு செய்து, நீர்வளத்துறையினர் தொடர்ந்து அணை நீர்வரத்தை கண்காணிக்கவும், அதற்கு ஏற்றார்போல் உபரி நீர் வெளியேற நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். அதேபோல், வேகமாக நிரம்பி வரும் சூளகிரி துரை ஏரியையும் கலெக்டர்
பார்வையிட்டார்.

