/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பருவமழை முன்னெச்சரிக்கை ஓசூரில் எம்.எல்.ஏ., ஆய்வு
/
பருவமழை முன்னெச்சரிக்கை ஓசூரில் எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : அக் 25, 2025 01:16 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், வடகிழக்கு
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்ய, ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள சுரங்கப்பாதையில் தி.மு.க., எம்.எல்.ஏ., பிரகாஷ், நேற்று காலை ஆய்வை துவங்கினார். அங்கு மழை பெய்யும் போது தேங்கும் நீரை, உடனுக்குடன் மோட்டார் மூலமாக வெளியேற்ற அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கால்வாய், ஜூஜூவாடியில் உள்ள ராஜகால்வாய் துார்வாரும் பணிகளை பார்வையிட்ட
எம்.எல்.ஏ., பிரகாஷ், விரைந்து பணிகளை முடித்து, மழைநீர் தேங்காமல் செல்ல, தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்க, அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.
முன்னதாக ராம்நகர் பள்ளம் பகுதியில் ஆய்வு செய்து, மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுப்பதுடன், சுகாதார பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். மாநகராட்சி கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம், பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், மாநகர நல அலுவலர் அஜிதா உடன் இருந்தனர்.

