/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'கிளீன் கிருஷ்ணகிரி' அமைப்பு துவக்கம் மாதம் இருமுறை செயல்படுத்த திட்டம்
/
'கிளீன் கிருஷ்ணகிரி' அமைப்பு துவக்கம் மாதம் இருமுறை செயல்படுத்த திட்டம்
'கிளீன் கிருஷ்ணகிரி' அமைப்பு துவக்கம் மாதம் இருமுறை செயல்படுத்த திட்டம்
'கிளீன் கிருஷ்ணகிரி' அமைப்பு துவக்கம் மாதம் இருமுறை செயல்படுத்த திட்டம்
ADDED : ஆக 03, 2025 12:50 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில், குப்பை தேங்கி கிடக்கும் பகுதி
களை சுத்தம் செய்து, சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், உள்ளாட்சி அமைப்பு, துாய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள், கல்லுாரி மாணவர்களை இணைத்து, 'கிளீன் கிருஷ்ணகிரி' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளியில், நேற்று 'கிளீன் கிருஷ்ணகிரி' அமைப்பு துவக்க விழா நடந்தது. தி.மு.க., நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி வரவேற்றனர். கிருஷ்ணகிரி பி.டி.ஓ.,க்கள் சிவப்பிரகாசம், உமாசங்கர் ஆகியோர் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க அனைவரும் ஏற்று கொண்டனர்.
கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலர் மதியழகன் எம்.எல்,ஏ., பேசியதாவது: கிருஷ்ணகிரியை பொறுத்தவரை இயற்கை வளம் முதல், அனைத்து வளங்களையும் பெற்றுள்ள மாவட்டம். இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வந்தாலும், கிருஷ்ணகிரியை தங்கள் சொந்த ஊராக ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அனைவரின் கடமை. மாதந்தோறும் இருமுறை முகாமை நடத்தி, குப்பை இல்லாத நகராக மாற்ற வேண்டும். பல்வேறு சங்கங்கள், கல்லுாரி மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள், 200 பேர் சேர்ந்துள்ளது மிகப்பெரிய வெற்றி. இன்னும் சில மாதங்களில், கிருஷ்ணகிரி முழுவதும் சுத்தமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு, அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் கீதா, கிறிஸ்தவ, முஸ்லிம் அமைப்பினர், துாய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள், பேராசியர்கள், மாணவ, மாணவியர், நகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினேஷ்ராஜன், துணை அமைப்பாளர் மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.