ADDED : மே 29, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவிபாளையத்தை சேர்ந்தவர் வேலு, 30. நேற்று முன்தினம் குப்பத்திலிருந்து ஜோடுகொத்துார் நோக்கி சென்ற பொக்லைன் ஒன்றில் கிளீனராக சென்றார். வினோத் என்பவர் பொக்லைனை ஓட்டினார். ஜோடுகொத்துார் கூட்ரோடு அருகே சென்றபோது, மேலே சென்ற மின்கம்பியில் பொக்லைன் உரசியது.
அதை துாக்கி விட, ஒரு கட்டையை எடுத்து மின்கம்பியை தொட்ட போது, கட்டையிலிருந்த இரும்பு பாகங்கள் மூலம், மின்சாரம் தாக்கியதில், துாக்கி வீசப்பட்ட வேலு, சம்பவ இடத்திலேயே பலியானார். வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.