/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிளீன் கிருஷ்ணகிரி சார்பில் துாய்மை பணி
/
கிளீன் கிருஷ்ணகிரி சார்பில் துாய்மை பணி
ADDED : அக் 26, 2025 01:10 AM
கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி நகர் பகுதி
யில், நேற்று கிளீன் கிருஷ்ணகிரி அமைப்பு சார்பில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட, 1, 7வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் நடந்த துாய்மை பணியை, கிருஷ்ணகிரி கிளீன் அமைப்பு ஒருங்கிணைப்பாளரும், மேற்கு நகர தி.மு.க., பொறுப்பாளருமான அஸ்லம் துவக்கி வைத்தார். நகராட்சி துணைத் தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, கிழக்கு நகர பொறுப்பாளர் வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துாய்மை பணிகள் குறித்து அஸ்லம் கூறியதாவது:
கிருஷ்ணகிரி சின்ன ஏரிக்கரையோரம் உள்ள குப்பை, கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, ஏரிக்கரைகளில் மண் கொட்டி கரை பலப்படுத்தப்பட்டது. ஏரியிலிருந்து, புதுார் ஏரிக்கு வெளியேறும் உபரிநீர் கால்வாய் அடைப்புகளும் துார் வாரப்பட்டன.
அதேபோல நாயுடு தெரு, முகமது உசேன் தெரு, பாபா சாயுபு தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை கால்வாய்கள் துார்வாரப்பட்டன. இப்பகுதிகளில் நீண்டகாலமாக கழிவுநீர் வெளியேறுவதில் உள்ள பிரச்னைகளை தீர்த்துள்ளோம். இப்பகுதியில் மீண்டும் குப்பை கொட்டாமல் சுகாதாரத்தை பேணுவது பொதுமக்களின் கடமை.
இவ்வாறு கூறினார்.
நகராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

