/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.1.35 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
/
ரூ.1.35 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
ADDED : அக் 26, 2025 01:10 AM
ஓசூர், ஓசூர் மாநகராட்சி, 16வது வார்டுக்கு உட்பட்ட சூர்யா நகரிலிருந்து, அப்பகுதியில் உள்ள மயானம் செல்லும் பாதை வரை, 15 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி மற்றும் பாரதி நகரில், 20.70 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி, பாரதி
நகர் அரசு நடுநிலைப்பள்ளியில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி ஆகியவற்றுக்கு, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, மாநகராட்சி பொது நிதி மற்றும் நமக்கு நாமே திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்பணிகளை, ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர், பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து பாரதி நகர், சூர்யா நகர், அரசனட்டி, ஸ்ரீசாய் நகர் ஆகிய பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்ய, 40 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பயன்பாட்டை, எம்.எல்.ஏ., பிரகாஷ் துவக்கி வைத்தார்.
மண்டல தலைவர்கள் காந்திமதி கண்ணன், ரவி, கவுன்சிலர் வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

