/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வக்கீல் மீது கொலைவெறி தாக்குதல் குண்டர் சட்டத்தில் குமாஸ்தா கைது
/
வக்கீல் மீது கொலைவெறி தாக்குதல் குண்டர் சட்டத்தில் குமாஸ்தா கைது
வக்கீல் மீது கொலைவெறி தாக்குதல் குண்டர் சட்டத்தில் குமாஸ்தா கைது
வக்கீல் மீது கொலைவெறி தாக்குதல் குண்டர் சட்டத்தில் குமாஸ்தா கைது
ADDED : டிச 19, 2024 12:59 AM
ஓசூர், டிச. 19-
ஓசூர் ரங்கசாமிபிள்ளை தெருவை சேர்ந்தவர் கண்ணன், 30, வக்கீல்; கடந்த மாதம், 20 மதியம், 1:00 மணிக்கு, ஓசூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நுழைவாயிலில் வைத்து, ஓசூர் நாமல்பேட்டையை சேர்ந்த வக்கீல் குமாஸ்தா ஆனந்தகுமார், 39, என்பவரால் கொலை செய்யும் நோக்கில் அரிவாளால் தாக்கப்பட்டார். ஓசூர் டவுன் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து, ஆனந்தகுமார் மற்றும் அவரது மனைவி வக்கீல் சத்தியவதி, 33, ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வக்கீல் கண்ணன் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார். இந்த வழக்கில் ஆனந்தகுமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை பரிந்துரைத்தார். அதையேற்று, மாவட்ட கலெக்டர் சரயு நேற்று உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகலை, ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜ், நேற்று சேலம் மத்திய சிறையில் வழங்கினார்.